icon-facebook icon-instagram icon-pinterest icon-soundcloud icon-twitter icon-youtube

விக்டோரியா உச்ச நீதிமன்றம் பற்றி

இந்தப் பக்கத்தை மற்றொரு மொழியில் கேளுங்கள் அல்லது படியுங்கள்

வலைப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள இந்த ஐகானைக் கிளிக் செய்தால், இந்தப் பக்கத்தை மற்றொரு மொழியில் கேட்கலாம் அல்லது ஆங்கிலத்தில் கேட்கலாம்.

வலைப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள ‘Other Languages’ என்ற பட்டனைக் கிளிக் செய்தால், இந்தப் பக்கத்தை மற்றொரு மொழியில் படிக்கலாம்.

இந்த வழிகாட்டியில் பொதுத் தகவல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன, இதை நீங்கள் சட்ட ஆலோசனையாகக் கருதக் கூடாது.

மொழிபெயர்த்தல் மற்றும் உரையை விளக்குதல் - தொலைபேசியில் பேசுவதற்கான உதவி

உங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்துடன் தொலைபேசியில் பேசுவதற்கு உங்களுக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், 131 450 என்ற எண்ணில் Translating and Interpreting Service (மொழிபெயர்த்தல் மற்றும் உரையை விளக்குதல் சேவை) -ஐ அழைத்து, உங்களது மொழியின் பெயரை ஆங்கிலத்தில் கூறுங்கள். பிறகு 03 8600 2000 என்ற எண்ணில் விக்டோரியா உச்ச நீதிமன்றத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு உரைபெயர்ப்பாளரிடம் கூறுங்கள்.

நீதிமன்றத்தின் பல்வேறு பகுதிகளுக்கான தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தொலைபேசி எண்களின் முழுமையான பட்டியல் எங்கள் வலைத்தளத்தின் ‘எங்களைத் தொடர்பு கொள்க’ என்ற பக்கத்தில் கிடைக்கும்: www.supremecourt.vic.gov.au/contact-us.

நீங்கள் சேவையைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெற, Translating and Interpreting Service (மொழிபெயர்த்தல் மற்றும் உரையை விளக்குதல் சேவை வலைத்தளம்)-ஐப் பார்க்கலாம்.

விக்டோரியா உச்ச நீதிமன்றம் பற்றி

உச்ச நீதிமன்றமே விக்டோரியாவில் உள்ள உயர்ந்த நிலை நீதிமன்றமாகும். மாநிலத்தில் உள்ள மிகச் சிக்கலான, தீவிரமான குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை இது விசாரிக்கிறது. விக்டோரிய நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் அனுப்பும் சில மேல்முறையீடுகளையும் இது விசாரிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள்

நீதிமன்றத்திற்கு முன்பு தற்போதுள்ள வழக்குகளைப் பற்றிய தகவல்களுக்கு, www.supremecourt.vic.gov.au/daily-hearing-list என்ற முகவரியில் தினசரி விசாரணைப் பட்டியலைப் பாருங்கள்.

மெல்போர்னில் விசாரிக்கப்படும் வழக்குகள்

பெரும்பாலான உச்ச நீதிமன்ற வழக்குகள் மெல்போர்னில் விசாரிக்கப்படுகின்றன. மெல்போர்ன் உச்ச நீதிமன்ற நிகழ்வுகளைக் காட்டும் நாட்காட்டியை www.supremecourt.vic.gov.au/going-to-court/court-calendar-இல் காணலாம்.

குறித்த பிரதேசங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள்

பெல்லாரட், பெண்டிகோ, கீலாங், ஹாமில்டன், ஹார்ஷம், மோர்வெல், மில்டுரா, சேல், ஷெப்பார்ட்டன், வாங்கரட்டா, வார்ன்நாம்பூல் மற்றும் வோடோங்கா உள்ளிட்ட விக்டோரியா முழுவதும் உள்ள இடங்களிற்கு நீதிமன்றம் பயணம் செய்தும் கூட வழக்குகளை விசாரிக்கிறது. அந்தப் பிரதேசங்களில் விசாரணைகள் நடக்கும் நாட்களைப் பற்றிய நாட்காட்டி பின்வரும் வலைத்தளத்தில் கிடைக்கிறது: www.supremecourt.vic.gov.au/going-to-court/court-calendar/regional-circuit-court-calendar

பிரதேசங்களில் (’சுற்று முறையில்’) விசாரிக்கப்படும் வழக்குகளைப் பற்றி அறிவதற்கான தொடர்புத் தகவல்

மேல்முறையீட்டு நீதிமன்றச் சுற்றுகள்: மின்னஞ்சல்: pbnertvfgel@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@yrtsigeraoc

பொதுவான சட்டப் பிரிவு உரிமையியல் சுற்றுகள்: மின்னஞ்சல்: pvivy.pvephvgf@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@stiucric.livic

குற்றவியல் பிரிவுச் சுற்றுகள்: மின்னஞ்சல்: pevzvanyqvivfvba@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@noisividlanimirc

நீதிமன்றத்தில் கலந்துகொள்ளுதல்

நீதிமன்றத்தில் அமர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் பெரும்பாலான வழக்குகளைக் கவனிக்க முடியும். மேலும் தகவலுக்கு, attending court (நீதிமன்றத்தில் கலந்துகொள்ளுதல்) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

Supreme Court of Victoria: The highest court in Victoria (விக்டோரியா உச்ச நீதிமன்றம்: விக்டோரியாவில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றம்) என்ற சிற்றேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கட்டணங்கள்

தற்போதைய கட்டணங்களின் பட்டியலை வலைத்தளத்தில் பார்க்கலாம் அல்லது முதன்மைப் பதிவகம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றப் பதிவகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  • Court of Appeal fees(மேல்முறையீட்டு நீதிமன்றக் கட்டணங்கள்)
  • Probate fees (உயிலைச் செல்லுபடியாக்குவதற்கான கட்டணங்கள்)

குற்றவியல் பிரிவில் விசாரிக்கப்படும் விவகாரங்களுக்குக் கட்டணங்கள் ஏதுமில்லை.

கட்டணத் தள்ளுபடிகள்

கட்டணத்தைச் செலுத்துவதற்கு உங்களுக்கு நிதிரீதியான கஷ்டம் இருந்தால், நீங்கள் Fee Waiver Application form (கட்டணத் தள்ளுபடி விண்ணப்பப் படிவம்)-ஐப் பூர்த்தி செய்து கட்டணத் தள்ளுபடிக்காக விண்ணப்பிக்கலாம் (அதாவது நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை). உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் எழுதும் விவரங்களை ஆதரிக்கும் சான்றை நீங்கள் வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் கட்டமைப்பு

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைப் பிரிவும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் அடங்கும். இந்த நீதிமன்றம் பல நிர்வாகச் சேவைகளையும் வழங்குகிறது.

Structure dia

 

பல்வேறு பிரிவுகளுக்கும் நீதிபதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவலை Judicial Organisational Chart (நீதித்துறை நிறுவன விளக்கப்படம்)-இல் காணலாம்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் பற்றி

மாவட்ட நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைப் பிரிவின் நீதிபதிகளாலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளைப் பற்றி Court of Appeal (மேல்முறையீட்டு நீதிமன்றம்) முடிவெடுக்கும். விக்டோரிய உரிமையியல் மற்றும் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (VCAT) தலைவர் அல்லது துணைத் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகளைப் பற்றியும் இது முடிவு செய்யும்.

விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டதா என்பதையும் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் இந்த நீதிமன்றம் முடிவு செய்யும். வழக்கமாக ஒரு மேல்முறையீடு குறித்த விசாரணையில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் இருப்பார்கள்.

பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டைக் கொண்டு செல்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது ‘மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டல்’ எனப்படும்.

தொடர்புத் தகவல்

தொலைபேசி: 03 8600 2001

மின்னஞ்சல்: pbnertvfgel@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@yrtsigeraoc

விசாரணைப் பிரிவு பற்றி

விசாரணைப் பிரிவில் பல தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் பிரிவு

கொலை, மனிதக்கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் போன்ற தீவிரமான குற்ற வழக்குகளை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தின் Criminal Division (குற்றவியல் பிரிவு) விசாரணை செய்கிறது.

குற்றவியல் பிரிவின் நீதிபதிகள், ஜாமீன் சட்டம் 1977 உட்பட்ட பல சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களையும் விசாரணை செய்கிறது.

தொடர்புத் தகவல்

குற்றவியல் பதிவகம்: தொலைபேசி: 03 8600 2059, மின்னஞ்சல்: pevzvanyqvivfvba@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@noisividlanimirc .

வணிக நீதிமன்றம்

சிக்கலான வணிக (வணிகம் சம்பந்தப்பட்ட) விவாதங்களை Commercial Court (வணிக நீதிமன்றம்) விசாரணை செய்கிறது. ஒவ்வொரு வழக்கும் ஒரு நீதித்துறை அதிகாரியால் நிர்வகிக்கப்படுவதற்காக ஒரு வணிக நீதிமன்றத்தின் ‘பட்டியலில்’ பதிவு செய்யப்படுகிறது. சிறப்புப் பட்டியல்களும் கூட உள்ளன, அவை சட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் சம்பந்தப்படுகின்ற வழக்குகளைக் கையாளுகின்றன.

தொடர்புத் தகவல்

வணிக நீதிமன்றப் பதிவகம்: தொலைபேசி: 03 8600 2002, மின்னஞ்சல்: pbzzrepvnypbheg@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@truoclaicremmoc

 உண்மையாக அவசரமாகவுள்ள வணிக நீதிமன்ற விவகாரங்களை வணிக நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதி ஒருவர் விசாரணை செய்யலாம்.

  • பணி நேரங்களில்: (காலை 9.00 - மாலை 5.00): தொலைபேசி: 03 8600 2002
  • பணி நேரங்களிற்குப் பிறகும், வாரயிறுதி நாட்களிலும்: 0439 153 522 என்ற எண்ணில் அழைக்கவும், அதில் தொடர்பு கிடைக்காவிட்டால் 0447 054 310.

பொதுவான சட்டப் பிரிவு

Common Law Division (பொதுச் சட்டம் பிரிவு) பலதரப்பட்ட வழக்குகளை நிர்வகிக்கிறது, இவற்றில் தனிப்பட்ட காயம், தொழில்முறைக் கடமை (ஒரு தொழில்நிபுணரின் அலட்சியமான செயல்களின் விளைவாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கை), உடைமை மற்றும் உயில்கள் மற்றும் சொத்துகள் குறித்த முரண்பாடுகள் தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளடங்கும். இது சில மேல்முறையீடுகளையும் விசாரணை செய்வதோடு, பொது அமைப்புகளாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை மதிப்பாய்வும் செய்கிறது.

நடவடிக்கைகளை ஒரு சிறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பட்டியலும் ஒரு குறிப்பிட்ட சட்ட விதிமுறையுடன் தொடர்புபடுகிறது, மேலும் அந்தக் குறிப்பிட்ட சட்ட விதிமுறையில் நிபுணத்துவமுள்ள ஒரு நீதித்துறை அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது. நிபுணத்துவம் தொடர்பான அறிவிப்பு – Specialist Lists in the Common Law Division (பொதுச் சட்டப் பிரிவில் உள்ள சிறப்பு நிபுணர் பட்டியல்கள்) – இது, சிறப்பு நிபுணர் பெயர்களின் பட்டியல்களையும் ஒவ்வொரு பட்டியலுக்கும் பொருத்தமான நடவடிக்கைகளின் வகைகள் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தையும் வழங்குகிறது. நடவடிக்கையைத் தொடங்குகின்ற தரப்பானது அந்த நடவடிக்கைக்குப் பொருத்தமான நிபுணர் பட்டியலின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும்.

தொடர்புத் தகவல்

முதன்மைப் பதிவகம் (பொதுச் சட்டம்): தொலைபேசி 03 8600 2008.

 உண்மையாக அவசரமாகவுள்ள பொதுச் சட்ட விவகாரங்களை Practice Court (பொதுச் சட்ட விசாரணை அமைப்பு) விசாரணை செய்யலாம்.

  • பணி நேரங்களில் (காலை 9.00 – மாலை 5.00): தொலைபேசி: 03 8600 2036, மின்னஞ்சல்: cenpgvpr.pbheg@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@truoc.ecitcarp
  • பணி நேரம் தவிர, வாரயிறுதி நாட்களிலும்: தொலைபேசி: 0412 251 757

செலவின நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் மற்றும் விக்டோரிய உரிமையியல் மற்றும் நிர்வாகத் தீர்ப்பாயம் (VCAT) ஆகியவற்றில் விசாரிக்கப்பட்டுள்ள வழக்குகளில் சம்பந்தப்படும் செலவினங்கள் குறித்து தரப்புகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படும்போது Costs Court (செலவின நீதிமன்றம்) விசாரணைகளை நடத்துகிறது. இது வக்கீல்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையில் கட்டணங்கள் பற்றி ஏற்படும் முரண்பாடுகளையும் விசாரணை செய்கிறது.

செலவின நீதிமன்றம் ஆனது கட்டணங்களைப் பரிசீலித்து, ஒரு மதிப்பீட்டை உருவாக்குகிறது (இந்தச் செயலை கட்டணங்களின் ‘வரிவிதிப்பு’ என்பர்). எடுத்துக்காட்டாக, நீதிமன்றம் ஒரு வழக்கறிஞர் அளிக்கும் செலவினங்களின் ரசீதில் உள்ள தொகையைக் குறைக்கலாம் அல்லது ஒரு தரப்பை மற்றொரு தரப்புக்குக் கட்டணங்களைச் செலுத்துமாறு உத்தரவிடலாம்.

தொடர்புத் தகவல்

தொலைபேசி: 03 8600 2007

மின்னஞ்சல்: pbfgf.pbheg@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@truoc.stsoc

 சட்ட நடவடிக்கையில் (ஒரு வழக்கறிஞர் இல்லாமல்) உங்களுக்காக நீங்களே பிரதிநிதித்துவம் செய்து வாதிட எண்ணுகிறீர்களா?

 உச்ச நீதிமன்றத்தின் சுய பிரதிநிதியாக வழக்காடுபவர்கள் (SRL) ஒருங்கிணைப்பாளர் பின்வருபவற்றில் உதவ முடியும்:

  • செயல்முறை மற்றும் நடைமுறை சார்ந்த வழிகாட்டல் (ஆனால் சட்ட ஆலோசனை அல்ல)
  • முரண்பாட்டைத் தீர்க்கும் மாற்று முறைகள் பற்றிய தகவல்கள்
  • பல்வேறு வழக்கு நடவடிக்கைகளில் உங்களுக்காக வாதாடும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ள உதவும் வழிகாட்டிகள்.

 SRL ஒருங்கிணைப்பாளருக்கான தொடர்புத் தகவல்

 நீங்கள் SRL ஒருங்கிணைப்பாளரைச் சந்திக்க விரும்பினால், தயவுசெய்து சந்திப்புக்கான முன்பதிவொன்றைச் செய்யுங்கள்:

 தொலைபேசி 03 8600 2031

 மின்னஞ்சல்: Haercerfragrq@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@detneserpernU

 Supreme Court Principal Registry-இல் ஒருங்கிணைப்பாளரின் அலுவலகம் உள்ளது.

நீதிமன்றச் சேவைகள்

முதன்மைப் பதிவகம்

Supreme Court Principal Registry (உச்ச நீதிமன்ற முதன்மைப் பதிவகம்) பின்வருவன உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகளையும் சேவைகளையும் செய்கிறது:

  • நீதிமன்றத்தின் கோப்புகளைப் பாதுகாப்பான சேமிப்பிடத்தில் பேணுதல்
  • நீதிமன்ற அழைப்பாணைகளை (ஆதாரத்தை வழங்க அல்லது வழக்கிலுள்ள ஆதாரத்திற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய, விசாரணைக்கு வந்து கலந்துகொள்ளுமாறு தனிநபரைக் கட்டாயப்படுத்தும் சட்ட ஆவணங்கள்) வழங்குதல்
  • வெளிநாடுகளில் சட்ட ஆவணங்களை வழங்குதல்
  • ஆவணங்களின் நகல்களை வழங்குதல்
  • செயல்முறை சார்ந்து அவசரமான விஷயங்கள் குறித்த ஆலோசனை வழங்குதல்
  • நீதிமன்றக் கட்டணங்களைச் சேகரித்தல்

பதிவக ஊழியர்களால் உங்களுக்குச் சட்ட ஆலோசனை வழங்க முடியாது. நீதிமன்றம், அதன் விதிகள், செயல்முறைகள் மற்றும் செயலாக்கங்கள் குறித்த பொதுவான தகவல்களை வழங்கி அவர்களால் உதவ முடியும்.

தொடர்புத் தகவல்:

தொலைபேசி: 8600 2004

முகவரி:

451 லிட்டில் போர்க் தெரு

மெல்போர்ன் வி.ஐ.சி 3000

இயங்கும் நேரங்கள்: காலை 9.30 - மாலை 4.00 திங்கட்கிழமை-வெள்ளிக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் தவிர

உயில்களும் உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழும்

Probate Office (உயில் செல்லுபடியாக்க அலுவலகம்)பின்வருவனவற்றுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் கையாளுகிறது:

  • உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழ் வழங்கல்கள் (இறந்தவரின் சொத்துகளைக் கையாள்வதற்கு நிறைவேற்றுபவர் அல்லது நிர்வாகியை அனுமதிக்கும் நீதிமன்றம் வழங்கும் சட்ட ஆவணங்கள்) மற்றும்
  • நிர்வாகம் (உயில் எதையும் எழுதி வைக்காமல் ஒருவர் இறக்கும்போது).

உயில் செல்லுபடியாக்க அலுவலகம் பின்வருவன பற்றிய பொதுவான தகவல்களை உங்களுக்குக் கொடுக்கலாம்:

  • இறந்தவரின் சொத்துகளின் உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழ் வழங்கல்களும் நிர்வாகமும்
  • உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழ் அல்லது நிர்வாகத்திற்கு விண்ணப்பித்தல்
  • ‘சிறிய பண்ணைகள்' சேவை
  • உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழ் பதிவுகளைத் தேடுதல்
  • உயில் செல்லுபடியாக்கச் சான்றிதழ் படிவங்கள் மற்றும் கட்டணங்கள்

தொடர்புத் தகவல்

தொலைபேசி: 03 8600 2000 (தேர்வு 1)

மின்னஞ்சல்: cebongr@fhcpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocpus@etaborp

முகவரி:

லெவல் 2,

451 லிட்டில் போர்க் தெரு

மெல்போர்ன் வி.ஐ.சி 3000

இயங்கும் நேரங்கள்: காலை 9.30 - மாலை 4.00 திங்கட்கிழமை-வெள்ளிக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் தவிர

நீதிமன்ற நிதிகள் அலுவலகம்

உரிமையியல் வழக்கு நடவடிக்கைகளில் நீதிமன்றத்திற்குச் செலுத்தப்படும் அனைத்து நிதிகளையும் நிர்வகிப்பதில் Senior Master (சீனியர் மாஸ்டர்) எனப்படும் சிறப்பு நீதிபதிக்கு Funds in Court (நீதிமன்ற நிதிகள்) அலுவலகம் உதவி புரிகிறது. ‘சன்மானம்’ அல்லது ‘சன்மானம்-அல்லாத’ நிதிகளாக இந்த நிதிகள் செலுத்தப்படும்.

‘சன்மானம்-அல்லாத’ அல்லது ‘விவாதிக்கப்பட்ட’ நிதிகளில், எடுத்துக்காட்டாக, செலவுகளுக்கான ஈட்டுப் பத்திரமாகச் செலுத்தப்படும் பணங்கள் அல்லது நிதிகள் குறித்த முரண்பாடு இருக்கும்போது நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு நடவடிக்கையின் விளைவை நிலுவையில் வைத்தல் போன்றவை உள்ளடங்கும்.

நீதிமன்ற வழக்கில் இழப்பீடு வழங்கப்பட்ட, ஆனால் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவராக இருப்பதால் அல்லது எடுத்துக்காட்டாக, ஒரு விபத்து, காயம் அல்லது உடல்நலக்குறைவு அல்லது புத்தி பேதலிப்பு போன்றவை காரணமாக அவர்களாகவே நிதிகளை ஏற்பாடு செய்ய முடியாத ‘பயனாளிகளுக்கு’ ‘சன்மானம்’ நிதிகள் வழங்கப்படுகின்றன.

நீதிமன்ற நிதிகள் அலுவலகத்தின் வலைத்தளத்தில் (www.fundsincourt.vic.gov.au) ‘சன்மானம்’ மற்றும் ‘சன்மானம்-அல்லாத’ நிதிகள் தொடர்பான முழு விவரங்கள் உள்ளன.

தொடர்புத் தகவல்

தொலைபேசி: 1300 039 390

தொலைபேசி (வெளிநாடுகளிலிருந்து அழைப்பவர்களுக்கு): 61 3 9032 3777

மின்னஞ்சல்: svp@fhcerzrpbheg.ivp.tbi.nhua.vog.civ.truocemerpus@cif

முகவரி

மெல்போர்ன் VIC 3000

இயங்கும் நேரங்கள்: திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை காலை 9.00–மாலை 5.00

விக்டோரிய நடுவர் குழுவினர்

விக்டோரியாவின் நீதி அமைப்பில் நடுவர் குழுச் சேவை ஒரு முக்கிய அங்கமாகும். நடுவர் குழு உறுப்பினராக நீதிமன்றத்தில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விக்டோரிய மக்கள் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர்.

நடுவர் குழுச் சேவைக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து நீங்கள் தோராயமாகத் தேர்வு செய்யப்பட்டால், தகவல்களை Juries Victoria (விக்டோரியா நடுவர் குழுவினர்) -இல் காணலாம்.

தொடர்புத் தகவல்

தொலைபேசி: 03 8636 6800

மின்னஞ்சல்: vasb@whevrf.ivp.tbi.nhua.vog.civ.seiruj@ofni

முகவரி

விக்டோரிய நடுவர் குழுவினர்

கீழ்த் தளம், மாவட்ட நீதிமன்றக் கட்டடம்

250 வில்லியம் ஸ்ட்ரீட்

மெல்போர்ன் VIC 3000

இயங்கும் நேரங்கள்: திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை காலை 8.45–மாலை 4.30

விக்டோரியா சட்ட நூலகம்

Law Library of Victoria (விக்டோரியா சட்ட நூலகம்) என்பது நீதிமன்றங்களுக்கும் சட்டத் தொழில் மற்றும் சமுதாயத்திற்கும் ஒரு முக்கிய வளமாகும். இது உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் மற்றும் VCAT ஆகியவற்றின் ஒன்றிணைந்த தொகுப்புகளை உள்ளடக்கியது. விக்டோரிய சட்ட நூலகத்திலிருந்து பொது உறுப்பினர்கள் எதையும் கடனாகப் பெற முடியாது, ஆனால் திறந்திருக்கும் நேரங்களில் உச்ச நீதிமன்றத்தின் நூலகத்தை பார்வையிட முடியும். நூலகத்தில் பரந்தளவிலான டிஜிட்டல் சட்ட வளங்கள் உள்ளன, அவை நூலகத்தில் உள்ள கணினிகளில் பொதுப் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன.

வலைத்தளம்: www.lawlibrary.vic.gov.au

முகவரி

உச்ச நீதிமன்ற நூலகம்

210 வில்லியம் ஸ்ட்ரீட்

மெல்போர்ன் VIC 3000

திறந்திருக்கும் நேரங்கள்

திங்கட்கிழமை – வியாழக்கிழமை காலை 8.30–மாலை 6.00

வெள்ளிக்கிழமை காலை 8.30–மாலை 5.00